கரைவந்து மோதும் கடலலை யாருக்கேனும் காத்திருக்குமா
அரைத்த மாவும் நாட்பட்டால் புளித்துத்தான் போகும்
குரைக்கும் நாயால் சூரியன் ஒளிகுன்றிப் போமோ
கரைவந்து மோதும் கடலலை யாருக்கேனும் காத்திருக்குமா
விரையும் காலமோர்நாள் முடிவுரை எழுதியே செல்லும்
-----இயல்பில்
அரைத்த மாவும் அரைநாளில் புளித்துத்தான் போகும்
குரைக்கும் நாயால் சூரியன்தான் ஒளிகுன்றிப் போமோ
கரையில் மோதும் கடலலையும் காத்திராது யார்க்கும்
விரையும் காலம் முடிவுரையை எழுதித்தான் செல்லும்
அரைத்தநல் மாவுமே அன்பே புளிக்கும்
குரைத்திடும் நாயால் கதிரொளி குன்றா
கரையினில் மோதும் கடலலையும் நிற்கா
விரையும்கா லம்முடிக்கு மே
----யாப்பில்