சந்திராயன் 3 எனும் தந்திரம்
மண்ணிலே புறப்பட்டு
விண்ணிலே கோலமிடச்
சென்ற சந்திராயனே 3 யே
சிம்ம முகம் கொண்ட நான்முக
பாரத இலட்சனையை பாதத் தடமாக
பாட்டி வடை சுட்ட நிலாவில் நீ பதி
விக்ரம் என்றால் வெற்றி
இந்தியா என்றால் அமைதி
சாப்ட் லேண்டிங் இல் சாதனை
செய்து புதுச் செய்தி தருவாயாக
புன்னகையால் பூவுலகிற்கு.
காத்துக் கிடைக்கிறோம்
காணொளியில் காண நீ காற்றில்லா
சந்திரனில் தந்திரமாக தரை இறங்குவதைக் காண
அடேய் சந்திராயன் 3 எனும் எம் மந்திரமே ...
நீ இதுவரை சாதித்தது ஏராளம்
நீ இனி சாதிக்க இருப்பது தாராளம்
உனை மகனாக பெற்ற இஸ்ரோ
தாயும் இந்தியா எனும் தந்தையும்
உளம்மகிழ உன்னதம் கொள்வாயாடா எங்கள் தங்கமே
உலகமே உனை உற்று நோக்கும்
அந்த ஓர் நொடி
விக்ரமே நீ சந்திரனை தந்திரமாக
வெற்றி கொள்வாய் ஆக.