உங்களையே தொடரும்

பாவங்கள் செய்துவிட்டு
பரிகாரம் தேடுவதுபோல்
பல கோயில்கள் சென்று
பகவானை வேண்டி
பாத பூஜை செய்தும்
படையலிட்டும்
புண்ணியம் தேடி
புலம்பி தவித்தாலும்

நாம் செய்த பாவங்கள்
நம்மை விட்டு அகலாமல்
நாளெல்லாம் தொடரும்,
நம் நிழல் போல்
நீங்காமல் பின்னே வரும்,
சூரியனை நோக்கி சென்றலும்
உங்கள் நிழல் பிரியாமல்--எப்போதும்
உங்களையே தொடரும்

எழுதியவர் : கோ. கணபதி. (24-Aug-23, 11:46 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 68

மேலே