தங்கப்புதையலாக நீ

தனித்த நொடிகளிலும்
உன் நினைவிலதிளைக்கும்
நொடிகளே! இனியவை..
இணைசேரா தண்டவாளமாய்
பிரிந்தே வாழினும்
நினைவுகள் இணைக்க
பயணிப்போம் இறுதி வரை.
பக்கமிருந்தும் பாராது..
பரமபத பாம்பாய் கொத்தி
இறக்குகிறது காலம்..
காத்திருப்பேன் நீ
கனியும் வரை..
இணைந்தால் பிறவிக்கு
முற்றுப்புள்ளி..இன்றேல்
தொடரட்டும் முடிவின்றி...
இப்படிக்கு. வாடாத வாசனை
மலராய் நான்....
தேடினாலும் கிடைக்காத
தங்கப்புதையலாய். நீ!!

எழுதியவர் : Sana (24-Aug-23, 7:01 pm)
பார்வை : 131

மேலே