சமூகம்
இவ்வுலகில் அவதரித்த
அனைத்து உயிர்களும்
மோகம் கொண்டு
இன்புறும்....
ஆனால்,
மோகத்தில் சிக்குண்டு
ஆறிலிருந்து அறுபதுவரை
சீரழிக்கும் சீர்கெட்டவளர்ப்பை
காறியுமிழ்ந்தால் தவறென்ன?
பெண்கள் உடுத்தும்
உடையிலிருந்து செல்லும்
இடம்வரை வரையறுக்கப்பட்டு
கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது....
அதே சமூகத்தில்
ஆண்களின் வளர்ப்பில்
எந்தவகையான கட்டுப்பாடும்
விதிக்கப் படுவதில்லையே
ஏன்...?
விதித்திருந்தால்,
பெண்களின் பாதுகாப்பு
இன்றைய கேடுகெட்ட
சமூகத்தில் கேள்விக்குறியாக
மாறி இருக்காதே!!!
இச்சமூக சீர்கேடு
அரங்கேற சரிசமமாக
பெண்ணுமோர் காரணியே,
காரணம் தறுதலைகளை
வளர்ப்பவள் பெண்தானே?
கவிபாரதீ ✍️