சுவரில் யோகீஸ்வரனாய் புதர் ஓவியம்

சுவரில் இருந்த புத்தரின் ஓவியம்
முகத்தில் அசாத்திய பேரொளி
மூடிய வாய்வழியே ஓர் அனாதிப் புன்னகை
கண்கள் ஆழ்ந்த த்யானத்தில் ஆனால்
அதில் ஓர் அற்புத கருணை
கைகள் கூப்பியிருந்தன
கடவுள் இவர் யாருக்கு கைகளால்
வந்தனம் செய்கிறார் ? அதுவும்
ஓர் யோகியாய் த்யானத்தில் ?

மீண்டும் புத்த பிரானின் ஓவியத்தை
சிரத்தையுடன் உற்று நோக்கினேன்
என் சிந்தனை இப்போது
பத்திரிகாச்ரமத்தில் யோகியாய்க்
காட்சி தரும் பகவான் கிருஷ்ணனை
கண்முன் நிறுத்தியது ..யோகத்தில் கண்ணன்
இப்பொது கொஞ்சம் புரிந்தது ...

சுவரில் நான் பார்த்த யோகத்தில் புத்தரும்
யோகீஸ்வரனாய் பத்திரியில் கண்ணனும்,,,
கடவுள் பரம யோகி.....
என்னை த்யானத்தில் நினைத்து மனதில் நிறுத்து
மனிதனே அதுவே உன் யாகமும் யோகமும் ...
உன் யாகம் எல்லாம் என்னையே வந்தடையும்
உனக்கேன் பின்னர் சோதனை ?
என்னை நம்பிடு.....என்பது

மீண்டும் புத்தபிரான் ஓவியத்தைப் பார்த்தேன்
அதே புன்னகை....அமைதி விழிகள்
என்னுள்ளத்தில் ஓர் அசாதாரண சாந்தம் ...

'புத்தம் சரணம் கச்சாமி'
' ஹரே கிருஷ்ணா....ஹரே கிருஷ்ணா..
கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே.
ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே '

.


....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (29-Aug-23, 2:56 am)
பார்வை : 34

மேலே