அந்திக் கருக்கலில்

அந்திக் கருக்கலில்
----------------------------------
எடு முதல் பத்தி
மேனியெலாம் மஞ்சள் தேய்த்துக் குளித்த மங்கலப் பெண்ணாய்
அந்த அந்திமாலை வேளையில் பூமி காட்சி தருகிறது;

தென்றல் தென்னையைத் தடவி
தெற்கே திரும்பி மல்லியவளை கிள்ளி
இதழ் விரித்து மலரச் செய்து
இனிய வாசத்தை அள்ளிப் பருகி

மனம் வீசும் அந்தி மாலையில்
மாடியில் குருவிகள் மாளிகையாக வைக்கோலால்
கூடு கட்டி கூடி உறவாடி
குடும்பமாக வாழும் காட்சி அற்புதம்

வேலை முடிந்த உடன் மாடி சென்று
வேடிக்கை பார்த்திடுவேன் குருவிகளின் சேட்டைகளை
கண்டு மகிந்து கவலைகள் மறந்தேன்

ஆள் உயர குழி தோண்டி
ஆழப் பதித்து நிமிர்ந்து நின்றது
வானத்தை தொடும் அளவுக்கு
வளந்து நின்றது மின் கோபுரம்

வேடிக்கையாக மாடிக்கு செல்கிறேன் குருவிகளை கண்டிட
கூண்டிற்குள் தாய்க் குருவி வரவில்லை
குஞ்சிகள் பசியால் கதற

எனக்கு அதனைப் பார்க்க மனதில் ஒரு இனந்தெரியாத வேதனை;
தொடுவானம் தாண்டி சூரியன் கூடடைகிறது;
எங்கும் இருளின் ஆட்சி;
இன்னும் தாய்க்குருவி திரும்பவில்லை!

எமனாகியிருக்குமோ மின்கோபுரம்;
மாண்டு போனதோ தாய்க்குருவி?
குஞ்சுகளிடம் இதனைச் சொல்லத் துடிக்குது மனசு;
குருவிகளின் மொழி தெரியாதே!
கத்திக் கத்தி சோர்ந்தன குருவிகள்;
அரிசி கொஞ்சம் பூமியில் தூவினேன்;
குருவிகள் கண்டு கொள்ளவில்லை!
என்னால் தாய்க் குருவியை மீட்டுத் தர இயலாதே!
வேண்டுமானால் பிரார்த்திக்கலாம்!

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (30-Aug-23, 5:41 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 57

மேலே