இயற்கை

இயற்கை
(((((((())))))

இறைவன் தந்தது
இயற்கையெனும் வரம் /

ஒரு மரமாவாது
நடவேண்டும் தினம் /

பேனிக் காத்திடல்
வேண்டியது வனம் /

மும்மாரி பொழிந்து
பெருகிடும் குளம் /

நெல் விளைந்து
நிறைந்திடும் களம் /

நாட்டில் செழித்து
வளர்த்திடும் வளம் /

காடுகள் வனவிலங்குகளின்
இருப்பிடங்களின் பலம் /

விலங்குகள் அழியாது
காப்பது நலம் /

சாப்பிட்ட விதைகளுடன்
வெளியேறும் மலம் /

மரங்கள் பரவிட
காரணம் மாவினம் /

பறவைகளுக்கு புகலிடம்
தருவது மரம் /

அசுத்தகாற்றை ஈர்த்துதரும்
நல்லகாற்றால் சுகம் /

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (29-Aug-23, 5:37 am)
Tanglish : iyarkai
பார்வை : 272

மேலே