மாயவனுக்கும் புரியலையே
அரணாகத் திகழும்
இமயமலை வயதில்
இளமையான மலை,
இன்றும் வளர்ந்து வரும்
இந்த மலை
இளமையிலேயிலேயே
முடி சூட்டிக் கொண்டது போல்
மூடிய பனி படலத்தால்
மகுடம் சூடிய மன்னராய் நிற்கிறது
மன்னரின் மகிழ்வால்
மேகக் கூட்டங்கள் ஆர்ப்பரித்து
முட்டி மோதி மங்கள நீராக
மழையைப் பொழிந்தது--மாறாக
மலைவாழ் மக்களை
மண்ணோடு எடுத்து சென்று
மரணத்தை விளைவித்தது
மஹா பாவமென்று
மன்னவனும் அறியலையே !
மாயவனுக்கும் புரியலையே !