திருகணபதி பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அன்பு அண்ணன்
திரு கணபதி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கவி

இவர்
சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்த கணபதி
அல்ல
கோவிந்தனுக்கும் இராஜ வேணிக்கும் பிறந்த கணபதி

இவர் தும்பிக்கையோடு பிறந்தவர் அல்ல ஒருநாள்
மனவெளி தொகுதி தன்னால் உயர்வு பெறும் என்ற நம்பிக்கையோடு பிறந்தவர்

இடையார்பாளையத்தில்
மலர்ந்த இவரைப் பற்றி
பாட மகிழ்கிறது
இப் பா லயம்

குறை வடிந்து கிடக்கிறது மனவெளி
மக்களுக்கோ அதனால்
மன வலி
ஏழை பிள்ளைகளைத் தூக்கி இவர் நெஞ்சில் சுமந்ததால் கரை படிந்து கிடக்கிறது
இவர் மன வெளி

அந்த கணபதி
வென்றது ஞானப்பழம்
இந்த கணபதியை
வெல்ல வைக்கப் போவது
மாம்பழம்

அந்த கணபதி
கருவறையில் இருப்பவர்
இந்த கணபதி
கருவறையில் இருந்தவர்

இவர் காட்சிக் கொடிகளை
எல்லாம் கட்சிக் கொடியாக்கியவர்

அனைவருக்கும் இவரிடம் பிடித்தது இவரின்
நாணயம் மட்டுமல்ல
நா நயமும் தான்

கொடை வள்ளல் கேள்விப்பட்டிருப்பீர்கள்
இவர் கோடையில் ஏழை மக்களுக்கு நிழல் தரும்
கோடை வள்ளல்

இவரால் ஒருநாள் புதுச்சேரி புது செர்ரி ஆக மாறப்போகிறது

இவர் விநாயகர் சதுர்த்தி என்றால் கடலில் கரைந்து விடும் கணபதி அல்ல
ஏழை மக்களுக்கு துயர் என்றால் அவர்கள் கண்ணீரில் கரைந்து விடும் கணபதி


இவர் ஊராண்டும் நூறாண்டும் இப் பாராண்டும் வாழ அன்போடு வாழ்த்துகிறோம்

கவிஞர் புதுவை குமார்
நிறுவனர்
உலகக் கவிஞர்கள் சங்கமம்

எழுதியவர் : Kumar (30-Aug-23, 12:26 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 40

மேலே