குருவே சரணம் குருவே சரணம்
நேற்றுவரை தவழ்ந்த குழந்தை இன்று
சற்றே நின்று நடக்க ஆரம்பித்தது
மாடிக்கு செல்லும் படிக்கட்டின் கீழே
தேடி வந்து நின்றது கைகளைப்பிசைந்து
தாயைப் பார்த்து படிக்கட்டையும் பார்த்து
புரிந்துகொண்டாள் தாயும் மெல்ல குழந்தை
படிக்கட்டில் ஏற கற்றுத்தர முனைந்தாள்
தொடர்ந்து இது சில நாட்கள்
நடந்திட முடிவில் ஒரு நாள் குழந்தைத்
தானே படிக்கட்டில் ஏறிட முயன்று
வெற்றியும் அடைந்தது ஏறிச்சென்று
எவெர்ஸ்டை அடைந்ததுபோல் நினைத்து
கைகொட்டி சிரித்தது குழந்தை அது
கள்ளமில்லா உள்ளத்தின் வெற்றி சிரிப்பு
இதிலிருந்து நாம் கற்பது என்னவென்றால்
சிகரம் அடைந்திட ஒரு குருவின் துணை
வேண்டும் எப்படி படி தெரிந்த குழந்தைக்கு
படி ஏற தெரியவில்லையோ அதுபோல்
நம் முன்னே 'கூகிள் சொல்லும் பாடம் இருந்தும்
அதைப் புரிந்துகொள்ள குருவின் துணைத் தேவை
அதுபோல புறவாழ்க்கைத் துறந்து அகவாழ்வு
காண பேரின்பம் துய்ய குருவின் துணை
வேண்டும் குருவில்லாமல் அடைய நினைப்பது
குருடன் துணை இல்லாது நதியைக் கடக்க
நினைப்பதுபோல் ஆகிவிடும் அதனால் இன்றே
நல்ல குறிவைத்த தேடி அடைவோம் அவர்
பாதத்தில் பனி செய்து வாழ்வின்
பயன் அறிவோம் முக்திக்கு வழி
அறிந்து அதை நாடி அடைவோம் நாமே
ராமனும் கண்ணனும் கூட மண்ணில்
மனிதராய்ப் பிறவி எடுத்து குருவின்
துணையில் எல்லாம் கற்றார் என்று
ராமாயணமும் பரதமும் கூறுகிறதே
குருவே சரணம் குருவே சரணம்