இரங்கல் பா
நண்பர் கர்ணனுக்கு
இரங்கல் கவி
இவன்
தன் நெஞ்சில்
முட்டுவதற்காகவே கன்றுகளை வளர்ப்பவன்
இவன் ஆறுதலாய் நினைத்து சாயும் நெஞ்சுகள் எல்லாம் நஞ்சுகளாகவே இருந்தது.
அனைவருக்கும் அழகைப் பார்க்கக் கண்களைப் படைத்திருந்த இறைவன் இவனுக்கு மட்டும் அழுகையைப் பார்க்க படைத்திருந்தேன்
இவன் வளர்த்தப் பூச்செடிகள் கூட வாசத்தைத்
தராமல் மோசத்தை மட்டுமே கொடுத்தது.
இவன் கா கா என்று கூவிக் கூவி சாதம் வைத்த காகங்கள் அனைத்தும் நாகங்களாய்
மாறியது.
இவனிடம் பிச்சை எடுத்தவர்கள் தான் இவன் மீது எச்சை தொடுதார்கள்
இவன் அன்பு காட்டியவர்கள் தான் இவன் மீது அம்பை எய்தார்கள்
அன்று
இவன்
சிலர் முன்னேற ஏணியாக இருந்திருக்கிறான்
மற்றும் சிலர் வாழ்க்கையில் கரை சேர தோணியாக இருந்திருக்கிறான்
பலரது கலை வளர கலை வாணியாக இருந்திருக்கிறான்
சிலருக்கு தேன் கொடுக்க தேனியாக இருந்திருக்கிறான்
இன்று
இவர்கள் அனைவரின் துரோகத்தை அறிந்து ஒரு ஞானியாக இறந்திருக்கிறான்..
வஞ்சகம் அனைத்தது
இவன் நெஞ்சகம்.
முகத்திற்கு முன்னால் துதித்தார்கள் முதுகிற்கு பின்னால் கால் எட்டி உதைத்தார்கள்
புறம் பேசுபவர்கள்
அது கொடிய விஷச் செயல்
என உணருங்கள்
கவிஞர் புதுவைக் குமார்
நிறுவனர்
உலகக் கவிஞர்கள் சங்கமம்