தெய்வம் போற்றுமோ -- அறசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தெய்வம் போற்றுமோ
******
( அறசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
( வாய்ப்பாடு)
( விளம் / மா / தேமா /அரையடிக்கு )

நெறிமுறை தவறி யிங்கு ,
... நீள்நெடுங் காலந் தொட்டு ;
அறிந்தும றியாது , யாப்பில்
... ஆர்வமி ல்லாது உந்தும் ;
சிறியதும் பெரிதும் ஆகும்,
... செய்யுளை எழுத்துந் தாங்க ;
பொறியிடை வந்த தெய்வம்,
.... போற்றுமோ? பழிக்கு மிங்கே !
******
( 1 மற்றும் 4 ம் சீரில் மோனை)

(மருத்துவர் ஐயா திரு. வ. க. கன்னியப்பன்
அவர்களின் வழிகாட்டல் படி இப்பதிவு)

எழுதியவர் : சக்கரை வாசன் (12-Sep-23, 5:46 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 25

மேலே