இடைவெளி

நித்தம் நித்தம்
உன்னை கண்டால்
எந்தன் உள்ளம்
உற்சாகம் கொண்டு
பன்னீரில் குளிக்குது

உனை ஒரு நாள்
காணவில்லையெனில்
எந்தன் கண்கள்
கண்ணீரில் குளிக்குது....!!

இவையெல்லாம்
காதல் செய்யும் காலத்தில்
காதலர்கள் சொல்லும்
உண்மையான வார்த்தைகள்

காதல் மணம் கொண்ட பலருக்கு
யதார்த்தமான வாழ்க்கையில்
உண்மையான இந்த வார்த்தைகள் நினைவில் நிற்பதில்லை

வசந்த காலத்து காதல் கசந்து
முகத்தின் திரைகள் விலகி
உண்மையான முகம்
வெளிச்சத்திற்கு வந்திட
வாழ்க்கை பாதையில்
இருவருக்கும் இடையில்
"இடைவெளி"

இடைவேளைக்குப் பிறகு
தொடரும் திரைப்படம் போல்
வாழ்க்கை படம் தொடர்வதில்லை

இந்த காலத்து இளைய சமுதாயம்
இது குறித்து சிந்திக்க வேண்டும்
சீரான வாழ்க்கை பாதையில்
"இடைவெளி" இல்லாமல்
பயணம் செய்திட வேண்டும்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (14-Sep-23, 4:59 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : idaiveli
பார்வை : 201

மேலே