மரணத்திற்கு முன் செய்ய வேண்டியது

தமிழ் வணக்கம் :

`அகர முதல எழுத் தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு`
ஈன்ற (தாய்) தமிழுக்கு முதல்வணக்கம்

தலைமை வணக்கம்:

தமிழை தன் சிந்தை கவி எழுத்துகள் தமிழை தரனி போற்ற செய்யும்
தமிழ் கவிகளுக்கு வணக்கம்

அவை வணக்கம்:

தமிழுக்கு தன் கவிதை வரிகள் மூலம் பெருமை சேர்க்கும் கவி பெருமக்களுக்கு அனைவருக்கும் தமிழ் வணக்கம்.

மரணத்திற்கு முன் செய்ய வேண்டியது:

துனண தலைப்பு:உதவி செய்

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது

உதவி மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது என்று
உதவி பற்றி வள்ளுவரின் அருள் வாக்கு.

யாருடைய கை கொடுப்பதற்கு நீள்கிறதோ அவன் மிக உயர்ந்தவன். -
சுவாமி விவேகானந்தர்

உதவி செய்தால் போதும் மற்ற மூன்றும் இதில் அடங்கும்

இறைவழிபாடு சொல்வது
மற்றவர் மீது அன்பு செலுத்தி உதவி செய்யவும் என்பதே

தர்மம் தலை காக்கும்
உதவியில் ஒன்றுதான் தர்மம்

உண்மையாய் இருப்பது என்பதும்
பலருக்கு உதவி செய்வது முலம் பண ஆசை இருக்காது .
பண வெறி ஒன்றே திருட்டுக்கு காரணம்

ஆகவே உதவி செய்வதே மரணத்திற்கு முன் செய்ய வேண்டியது

நன்றி நவிலல் :
வாய்ப்பு தந்த அனைவருக்கும் நன்றி

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (16-Sep-23, 5:35 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 44

சிறந்த கட்டுரைகள்

மேலே