தனக்கு கணக்கு

தம்பிகளா, இங்கு கொஞ்சம் வாங்க.
@@@@@
என்னங்க ஐயா?
@@@@
நான் உங்க ஊருக்கு புதுசு. இங்கு நண்பர் ஒருவரைப் பார்க்க வந்தேன். அவுரு பேரு தனராசு.
@@@@@@
ஐயா இந்த ஊரில் தனராசுனு யாருமே இல்லீங்க ஐயா.
@@@@@@
அவர் வீடு மூணு மாடிக் 🏢 கட்டடம். அவர் மூணாவது மாடி கைப்பிடிச் சுவரின் நாலு மூலையிலும் பள்ளிக்குச் சிங்க சிலைகள் இருக்கும்.
@@@@@@
ஐயா அது எங்க வீடுதான். ஆனா எங்க அப்பா பேரு தனராசு இல்லை.
@@@@@@
சரி தம்பிகளா உங்க அப்பா பேரு என்ன?
@@@@@
எங்க அப்பா பேரு 'தன்ராஜ்'.
@@@@@@@@
ஓகோ.... தனராசு தான் 'தன்ராஜ்'னு மாறிப் போச்சு. அப்பா உங்க இரண்டு பேரோட பேரும் கண்டிப்பா இந்திப் பேருங்களாத் தான் இருக்கணும். உங்க பேரைச் சொல்லுங்க.
@@@#@@#@@
என்னோட பேரு 'தனக்'. இவன் என் தம்பி. இவன் பேரு 'கனக்'.
@@@@@@@@
சரி. நல்ல பேருங்க. உங்க அப்பா வீட்டில் இருக்கிறாரா?
@@@@@@@
ஆமாம். நாட்டரசன் கோட்டையிலிருந்து அவரது நண்பர் ஒருவர் வருவாருனு சொல்லிட்டு இருந்தாரு.
@@@@@@
அது தான் தம்பிகளா.
@@@@@@
வாங்க ஐயா வீட்டுக்குப் போகலாம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Kanak = Gold. Unisex name
Tanak = Prize.
@@@@@@#@######@@@@@@@@@###@@@
தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்

எழுதியவர் : மலர் (19-Sep-23, 4:17 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : thanakku kanakku
பார்வை : 72

மேலே