காடும் மரங்களும் தழைத்தோங்க
பூ காய் கனிகள் தரும் பருவத்தில் ,
சூரியன் நெருப்பாய் எரித்திடும் போது,
நிழலும் தந்து குளிரும் தருகின்றாய்
கொடைக்கு பாரிபோல் மரமே எமக்குநீ
தந்தை தாயையும் கூட காக்க மறக்கும்
மாந்தர் ஐயகோ கொடுமை கொஞ்சமும்
பாராது உன்னை வெட்டி வீழ்த்துகின்றாரே
கறவை மாடு கறக்காது போனால்
வெட்டி அதை புலாலாக்குவது போல ;
ஓரறிவு ஜீவனுக்கு சுயநம் இல்லை
சுயநலத்திலேயே வாழும் மாந்தர் பலர்
நியதியை மாற்ற இறைவன் நினைத்திடவேண்டும்
மரங்கள் பல்லாண்டு வாழ்ந்திட காடுகள்
தழைத்திட பல்லாண்டு பல்லாண்டு நீடுவாழ
ஆண்டவனே வழிவகுப்பாய் நீ