பகல் நிலவு
பகல் நிலவு
×××××××××××
ஏய் தமிழச்சி
ஏக்கங்கள் வந்தாச்சு
காதலிக்கும் வயசாச்சு
கைப்பிடிக்கும் நேரமாச்சு
ஏய் தமிழச்சி..
நிலவானால் உன்னை
வானத்தை வலையாக்கி
வளைத்து பிடிப்பேன்
வானவில்லனால் ஒடித்து
மடி சாய்ப்பேன் பெண்ணே...
உன்னை நினைப்பேன்
பசி மறப்பேன்
கனவில் ரசிப்பேன்
பகலில் காணது துடிப்பேன்
கடலலையை மெத்தையாக்கி
கதிரவனை சிறைப்பிடித்து
காமனை அழைப்பேன்
காலையில் நிலவினை காண்போமே..