வாழ்நாள் பரவசம்

உயிர் உள்ளிருந்து
இதமாய் சிலிர்க்கும் -அதே
நொடியில் நெஞ்சம்
பஞ்சாய் பறக்கும்
பரவசத்தில்....

அன்றலர்ந்த மலராக
பழக்க மில்லா
வெளிச்சக் கீற்றில்
பொடி விழிகளை....
திறந்திடும்....

உன்தன் உதிரம்
உள்ளங் கைகளைத்
தொடும் நொடியே
மனிதனின் ஈடில்லா
வாழ்நாள் பரவசம்....

கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (24-Sep-23, 9:59 am)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : vaazhnaal paravasam
பார்வை : 96

மேலே