விவசாயி6
விவசாயி
இவன்
நஞ்சில் பூக்க
வேண்டிய பூ
நீர் இன்றி
இவன் நெஞ்சில்
பூத்தது
அந்த பூ
மாரடைப்பு
மண்ணை வெட்டி
வாய்க்காலில்
நீர் பாய்ச்ச வேண்டிய மண்வெட்டி
இவன்
கண்ணை வெட்டி
வாய்மீது
நீர் பாய்ச்சியது
கதிரை அரிய
மறுத்தது
இவன் அரிவாள்
புதிரை அறிய
மறந்தான்
இவன் அறிவால்
இவன்
விதை விதை அல்ல
கண்ணீர் கவிதை
நல்ல நேரம்
பார்த்தே நட்டு வைத்தான்
வித்தை
அது சரியாக வளராமல்
இவனுக்கு காட்டியது
வித்தை
பிஞ்சு வைக்க வேண்டிய
செடிகள்
நஞ்சு வைத்தது.
கடலைப் புதைக்கப்
பயன்பட்ட கடப்பாரைகள்
இவன் உடலைப்
புதைக்கவே பயன்பட்டது
எந்தப் பச்சை மையும்
இவன் நிலத்திற்குத்
தரவில்லை
பசுமை
வெள்ளாமை நுழைய வேண்டிய இவன் வீட்டில் ஆமை மட்டுமே நுழைந்தது
முப்போகம் விளைய வேண்டிய இவன் நிலத்தில் சோகம் மட்டுமே விளைந்தது
குளம் இருந்தும் இவன் குலம் செழிக்க வில்லை
நிலம் இருந்தும் இவன் வாழ்க்கை நீளம் ஆகவில்லை
இவன் விதைத்த போது கிடைக்காத தண்ணீர்
கிடைத்தது
இவனை புதைத்த போது
குடத்தில்
கன்னடத்தில் இருந்து நீரை பெறுவோம்
இவன் கண் தடத்திலிருந்து நீரை குறைப்போம்