ஓடத்திலோர் தேடல்
ஓடத்திலோர் தேடல்
×××××××××××××××××××
நீலநிறத் தடாகத்தில்
நீந்திடும் ஓடத்தில் /
வண்ணத்துப்பூச்சி சிறகுகள்
விரித்துப் பறந்திடும் /
வண்ண அழகில்
கண்ணில் பதிந்தாள்/
கடலின் தேவதையாக
கடற்சிற்பியின் முத்தாக /
நீரினைக் கிழித்திடும்
நெத்திலி மீனாக /
நீலநிறக் கண்களின்
நீண்டப் பார்வையில் /
இதயத்தைக் கிழித்து
இரத்தத்தில் கலந்தாள் /
உருண்டோடிய நதிகளை
உறவாக இணைத்திடும் /
கடலாகக், காதலியே !
காதலை உள்வாங்கி/
கடல்நீர் உப்பாக
கலந்திடுவோம் காதலராக/
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்