விலைபோகும் விண்மழை
விலைபோகும் விண்மழை
++++++++++++++++++++++++++
பொழியும் மழையும்
பொங்கிடும் வெள்ளமும்
தங்கிட நீர்நிலையின்றி
தஞ்சமாகும் கடலிலே
ஆற்றில் ஓடும்
அழகு நீர்
சேற்றாக மாற்றிட
சேர்த்திடுவர் கழிவுநீரை
நீர்யின்றி உலகமில்லை
நீயிருந்தால் நீர்யில்லை
தீர்வுதான் யாதெனில்
தேவைதான் சிக்கனமே
குவளைத் தண்ணீர்க்கு
குழியிடுவோம் ஆயிரமடி
அவலநிலை பூமிக்கு
அபாயம் மனிதனுக்கே
நிலங்களை துளையிட்டு
நிலத்தடி நீரெடுத்து
நிரப்பிடும் நெகிழியில்
விலைபோகும் விண்மழையும்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்
படம் : வற்றாத ஜீவநதி என்று பெயர் பெற்ற தாமிரபரணி ஆற்றில் பல லட்சம் லிட்டர் சாக்கடை நீர் கலப்பதால் கருப்பு நிறத்தில் காணப்படும் வற்றாத ஜீவநதியின் நீர்.