அஸ்தமனம் ஏது

மொழியில் வசப்பட்டு
அனைத்திற்கும் பெயரிட்டு
ஆசையை பயிரிட்டு
தன்னை வலையிலிட்டு
சிந்தனை அலையவிட்டு
ஊருக்கு கொள்கைவிட்டு
நிறங்களை பூசிவிட்டு
சித்திரங்களை பேசவிட்டு
வேசம் போட்டுவிட்டு
மந்திரங்கள் ஓதவிட்டு
மாயங்கள் கதையிலிட்டு
மர்மங்கள் பயத்திலிட்டு
உண்மையை பொய்யிலிட்டு
நீரில் மாசிட்டு
நிலத்தில் நச்சுயிட்டு
காட்டில் தீயிட்டு
காற்றில் புகையிட்டு
ஓசூணில் ஓட்டையிட்டு
அறிவில் துளையிட்டு
இயற்கையை சிறையிலிட்டு
செயற்கை செயலிலிட்டு
நோயை உடலிலிட்டு
பகையை கொளித்திவிட்டு
ஆயுதம் மனதிலிட்டு
அன்பை தெருவிலிட்டு
பூமியை குப்பயிலிட்டு
ஆனந்தம் தூக்கிலிட்டு
உறவை சுருக்கிவிட்டு
தலைமுறையை கருவிலிட்டு
மீண்டும் பெயரிட்டு
தோளில் சுமையிட்டு
சாபம் தொடறவிட்டு
காலம் பொகவிட்டு
அனைத்தையும் விட்டுவிட்டு
.............
எதை சொல்லி
எதை செய்தான்
யார் சொல்லி
யார் செய்தான்

யார் நம்பினான்
யாரை நம்புவான்
விடியும் சூரியனில்
அஸ்தமனம் ஏது
தேயாத நிலவில்
அமாவாசை ஏது
பௌர்ணமி ஏது

எழுதியவர் : Rskthentral (31-Oct-23, 11:19 pm)
சேர்த்தது : rskthentral
பார்வை : 125

மேலே