இளங்கிளை தாங்கு மினியதோர் செய்கை - எழுசீர் ஆசிரிய விருத்தம்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(1, 5 சீர்களில் மோனை)
இளங்கிளை தாங்கு மினியதோர் செய்கை
..இனிமையும் நன்மையு மாக்கும்;
இளங்கலை கற்றல் வேண்டுமோ யிதற்கு
..மின்சொலாற் சொல்லுவா யெழிலி!
இளம்பிடி போன்ற வெழிலுறு கண்ணே
..யேற்புடை சொல்லுவா யினிதே;
ஒளியுமிழ் கண்ணே யுன்மனஞ் சொல்வா
..யுள்ளொளி யேற்றியே யின்னே!
- வ.க.கன்னியப்பன்