இங்கிதம் தெரியாதவள்

பக்கத்து வீட்டுக்காரர் அவுங்க பொண்ணுக்கு 'அங்கிதா'னு இந்திப் பேரை வச்சாங்க. நீ அதுக்குப் போட்டியா உம் பொண்ணுக்கு வச்ச பேரு சரியா மகனே?
@@@@@@
அதுக்கு என்னம்மா? அவுங்க பொண்ணுக்கு இந்திப் பேரை வச்சிருக்கிறாங்க. நான் எம் பொண்ணுக்கும் தமிழர் வழக்கப்படி இந்திப் பேரைத்தானே வச்சிருக்கிறேன்.
@@@@@@
என்னடா பேரு வச்ச? வச்சுட்டானாம் பேரு.
உம் பொண்ணுக்கு 'இங்கிதா'னு பேரு வச்ச. கல்லூரில படிக்கிற உம் 'இங்கிதா' கொஞ்சம்கூட இங்கிதம் இல்லாம எதை எங்க, எப்படி, யாரிடம் என்ன பேசறது தெரியாம பேசறாளே அது நல்லா இருக்குதா?
@@@##@##
நம்ம ஊரில உன்னைத் தவிர எல்லாரும் "இங்கிதா அருமையான பேரு. சூவீட் நேம்"னு சொல்லிப் பாராட்டாறாங்க அம்மா.
@@@@@@@


@@@@#

எழுதியவர் : மலர் (17-Nov-23, 3:33 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 37

மேலே