இரவு பூசாரி

மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்து மூன்று நாள் ஆகிறது.
செவிலிப்பெண் குழந்தையின் தந்தையிடம்: ஐயா உங்கள் மனைவிக்கு குழந்தை பிறந்து மூணு நாள் ஆகுது. குழந்தைக்கு நீங்கள் வைக்க விரும்பற பேரைச் சொல்லுங்க.
@@@@@@@
குழந்தையின் தந்தை: நிஷி பூஜாரி.
@@@@@
என்னங்க ரொம்ப புதுமையான பேரா இருக்குதுங்க. எப்படி இந்தப் பேரைத் தேர்ந்தெடுத்தீங்க?
@@@@#@
நான் இன்று மதியம் தொலைக்காட்சி பார்த்துட்டே இருந்தேன். அப்ப ஒரு விளம்பரம் வந்தது. அந்த விளம்பரத்தில்
ஒரு இளம்பெண் "நான் நிஷி பூஜாரி"னு தன்னை அறிமுகம் செய்தது. அந்தப் பேரு புதுமையான பேருங்க. அதனால் அந்தப் பேரையே எங்க குழந்தைக்கு நாங்கள் விரும்புகிறோம்.
@@@@@@
சரி. அந்தப் பேருக்கு பொருள் தெரியுமா?
@@######
அது இந்திப் பேருன்னு தான் தெரியும். அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியாதுங்க.
@@@@@##

செவிலிப்பெண் அந்தப் பேரை பதிவு செய்துவிட்டு சிரித்துக் கொண்டே போகிறார்.வழியில் அவரைப் பார்த்த அவரது தோழி:
என்னடி சிரிச்சிட்டே வர்ற?
@@#@@@@@
இரவு பூசாரியைப் பார்த்துவிட்டு வர்றேன்.
@@@@##
என்னடி சொல்லுற?
#######
மூணு நாளைக்கு முன்னாடி பிறந்த ஒரு பெண் குழந்தையோட பேருதான் 'இரவு பூசாரி'.
@@@###
இரவு பூசாரியா?
#####@@@
என்னடி பைத்தியக்காரத்தனம். 'இரவு பூசாரி'.
@@@@@@
இந்திப் பேரை நான் தமிழில் சொன்னேன்.
அந்த இந்திப் பேரு நிஷி பூஜாரி. Nishi -னா இரவு. Nisha -னாலும் இரவு. பூஜாரி - பூசாரி.
@@@@@@@@
அந்தக் குழந்தை பள்ளில படிக்கிற போது அவளோட வகுப்பில படிக்கிறவங்க எல்லாம் 'பூசாரி, பூசாரி'னு கூப்புடுவாங்க. பாவம் அந்தக் குழந்தைக்கு எவ்வளவு மன உளைச்சல் ஏற்படும். பாவம். ஐயோ கடவுளே ! @@@@#@@@@@@@@@@@@@@@@@@@@@

எழுதியவர் : மலர் (15-Nov-23, 7:39 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 47

மேலே