களி உருண்டை அவிச்ச வேர்க்கடலை
(காவல் நிலையத்தில்):
ஆய்வாளர் காவலரிடம்: யாரு இந்த ஆளு? எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த?
@@@@
ஐயா, இவன் விசாரணை கைதியாக இருபது வருசமா சிறையில் இருந்தானாம். நேத்து தான் விடுதலை ஆனான். வெளில போறவங்க வர்றவங்கிட்ட "களி உருண்டை அவிச்ச வேர்க்கடலை, களி உருண்டை அவிச்ச வேர்க்கடலை"னு கேட்டுத் தொந்தரவு செய்யறான். யார் ஆதரவும் இல்லாத அனாதை போல. அவனை விசாரிச்சா "களி உருண்டை அவிச்ச வேர்க்கடலை"னு மட்டுமே பதிலாகச் சொல்லறான். வேற எதையும் சொல்லமாட்டன்ங்கிறான். @@@@@@@@
இவன் மனநிலை பாதிக்கப்பட்டவன் மாதிரி தெரியுது. பாவம் இருபது வருசமா களி உருண்டை அவிச்ச வேர்க்கடலை தின்னு பழக்கப்பட்டதால் அதைத் தவிர இவனுக்கு வேற எதுவும் தெரியல. .
எதாவது குற்றச் சட்டப் பிரிவில் முதல் தகவல் அறிக்கை தயார் பண்ணி இவனை உள்ள தள்ளணும். நீதிமன்ற தீர்ப்புப்படி சிறையா கீழ்ப்பாக்கமாங்கிறத நீதியரசர் முடிவு செய்வார். நம்ம கையில என்ன இருக்குது.