அந்தியெழில் வானத்தில் ஆகாய நீலத்தில்

அந்தியெழில் வானத்தில் ஆகாய நீலத்தில்
சந்திரன் வெண்ணொளி சிந்த நனையுமுன்
வெண்ணிற மேனிகண்டு வேதனையில் வாடிமனம்
புண்ணாகித் தேயுது பார்
அந்தியெழில் வானத்தில் ஆகாய நீலத்தில்
சந்திரன்தன் வெண்ணொளியைச் சிந்திடவே நனையுமுந்தன்
இந்துநிகர் மேனிகண்டு இன்னலுற்று வாடிமனம்
நொந்துநொந்து தேயுதுபார் நிலாவங்கே வானத்தில்
---காய் காய் காய் காய் கலிவிருத்தம்