அம்மன் கண்திறந்தாள்குறுங்கவிதை
" அம்மன் கண்திறந்து காட்சி தந்தாள் ''
அவ்வூரின் அம்மன் பக்தைக் கூறக்கேட்டு
அடுத்த நாள் அம்மனை தரிசிக்க
அலைமோதியது கும்பல்....நெருக்கடி
போலீஸ் தடி அடி....சிலருக்கு படு காயம்
எது மெய்.....எது பொய் .....யார் கூறுவார் ?
பக்திக்கும் பலன் தேடி அலையும் உலகு !