மழை

. மழை
🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧
புவி யோடு அணுக்கம் (நெருக்கம்) கொள்ள பொழிகின்றாய் என்றாலும் - இன்று
மாணவன் மட்டும் தான் மகிழ்கின்றான் விடுமுறையால்

வானம் பார்த்து காத்திருப்பான் வருவாய்என விவசாயி - நீயோ
வட்டாடல் ( சூதாடல்) செய்திடுவாய் பெருமழையாய் பெய்திட்டு

முகரிமை (பேரறிவு) வளர்ச்சியிலே முன்னேற்றம் என்றாலும் - பல நேரம்
தகர்ந்திடும் நம்பிக்கை நீ தாவிவர வீட்டிற்குள்

அரசின் மேல் உடற்சி (கோபம்) கொண்டு அதிகாரியை திட்டிடுவான் - என்ன செய்ய
பரிசில் போட்டு வீதியிலே பயணம் கொள்ள நேர்கிறதே !

கோடிகளில் பணம் ஈட்ட ஏரியிலே மனை அமைத்தான் - அதிகாரியின்
அனுமதியை பெறுவதற்கு சிறு பணமே கவழிகை(திரைச்சீலை)யாய்

சுரும்பு(மலை)களில் பெய்தாலும் சுருண்டு நீ ஓடிவந்து - தங்குவதற்கு
ஏரி குளம் தேடுகின்றாய் இருப்பதுவோ வீடுகளே

பெய்தாலும் புலத்தல்(வெறுத்தல்)தான் பெருமழையே உன்மீது - நகர் முழுக்க
குடியிருப்புக்கு எல்லாமே குடை கொடுத்தே ஆகனும் போல்

முன்பெல்லாம் ---

மேலாலம்(மழை) பெய்வதனால் மேம்பட்டது விவசாயம் - இன்று
வீதியிலே நீர் இறைத்து கால்வாயில் நீர் பாய்ச்சல்

மனை அமைத்து பணம் ஈட்டும் கட்டழலில்(பெரு நெருப்பில்) கவரப்பட்டு - விளைவு
வீதிகளில் படகோட்டி சாலைகளைக் கடக்கின்றான்

குளங்களும் ஏரிகளும் குடியேற்றம் மழைக்கன்றி - மனிதா
நீ தாண்டா நிமர்ச்சி(உறுதி)யாய் நிற்கின்றாய் ஊடகத்தின் முன்

வீதிகளில் நீர் இறைத்து வரிப்பணங்கள் வீணடிப்பு
- மழைமுடிந்து
வெள்ளமீட்பு செலவு தொகை விண்ணேறே மக்களுக்கு !

பணம் ஈட்ட மனித மனம் பனை உயரம் அமறல் (மிகுதி)பெற்று - இன்று
நாடெல்லாம் ஊழல் மயம் நான் மட்டும் என்ன செய்ய ?

⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️

எழுதியவர் : (26-Nov-23, 3:20 pm)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : mazhai
பார்வை : 77

மேலே