மலர்விழியாள் மௌன மொழியாள் மாலை வருவாள்

இடை ஒரு இலக்கியம்
அரங்கேறும் அதில் கம்பனின் காதல் நாடகம்
கடைவிழி ஒரு காவியம்
அது காளிதாசன் காதல் சந்தேசம்
பதம் இரண்டில் ஒலிக்கும் மெல்லிய ராகம்
அது இளங்கோ தந்த சிலம்பொலிப் பாயிரம்
சிற்றிடையாள் குறுநகை புரிந்திடும் சித்திரம்
அது குறளில் வள்ளுவன் வரைந்த காதலோவியம்
இளந்ததென்றல் காற்றில் குழலாடும் கூந்தலாள்
புகழேந்தியின் வெண்புன்னகை வெண்பா அன்றோ
மலர்விழியாள் மௌன மொழியாள் மாலை வருவாள்
என்னை என்ன எழுதச் சொல்வாளோ !

எழுதியவர் : கவின் சாரலன் (26-Nov-23, 9:06 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 80

மேலே