இதழ்விரியும் புன்னகையில் இளந்தென்றல் நீவந்தாய்

உதயத்தின் பொற்கதிரில் உயர்கமலம் இதழ்விரிக்க
இதழ்விரியும் புன்னகையில் இளந்தென்றல் நீவந்தாய்
இதயப்பொ ழில்தன்னில் இன்னுமொரு தாமரையாய்
புதுமைப்பூங் கவிதைகள் பூத்தனவா னவில்லைப்போல்

----எழு கலித்தளையால் தரவு கொச்சகக் கலிப்பா ஆனது

உதயத்தின் பொற்கதிரில் உயர்கமலம் இதழ்விரிக்க
இதழ்விரியும் புன்னகையில் இளந்தென்றல் நீவந்தாய்
இதயப்பொ ழில்தன்னில் இன்னுமொரு தாமரையாய்
புதுமைசெய்யும் பூம்பாக்கள் பூத்திடுது வானவில்போல்
------இப்பொழுது காய் நான்கின் கலிவிருத்தம்

உதயக் கதிரில் உயர்கமலம் பூக்க
இதழ்மென் சிரிப்பில் இளந்தென்றல் நீவா
இதயப்பொ ழில்தன்னில் இன்னுமொரு பூவாய்
புதுமையில் பூத்திடும் பா

----இன்னிசை வெண்பா
எல்லா கவிதையிலும் எதுகை மோனை பயின்று
வந்துள்ளன

எழுதியவர் : கவின் சாரலன் (27-Nov-23, 10:05 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 151

மேலே