கலியுகத்தின் கடைவள்ளல் வள்ளலார்

கலியுகம் காட்டும் கடைசிசித்தன் வள்ளல்
புலிக்கழுகும் பொல்லா புசிப்ப - கலியுக
வள்ளல் உலகுபசி வாட்டமழி நோக்கமும்
துள்ளும் பசிகொல் வழி

வாடும் பயிர்காண வாடிய வள்ளலும்
பாடும் வயிற்கு பசிஎன்றார் -- நாடுபோற்ற
காடு வடலூரில் கண்டமைக்க வன்னதானம்
போடும் வழக்கம்காண் போய்


மனுநீதி நூலை எழுதிய மாகான்
மனுவடநூல் போல்தமிழ் மன்றில் - முனைந்தார்
மனுவும் உரையில் மனிதர்க்கு வள்ளல்
பனுவல் தமிழில்லை பார்

ஜீவகாருண் யம்பரோப காரமே ஜீவமுக்தி
பாவமாங் கொன்று படைக்கவள்ளல் -- நாவாயோ
.மேவ பெருங்கடல் மீண்டெழ வீணது
பாவும் பிறப்பதும் பார்

ஜீவ கருனையே ஜீவன் பெரும்பர
ஜீவனில் சேர்க்குமே நின்று


கடைசித்தன் கண்டவழி காணா மறைத்தார்
படைகொண்டு நீயும் பரப்பு -- இடைஞ்சல்
தொடைநடுங்க செய்யும் தொடரு விடாதே
விடைதந்தேன் நின்றுபார் வென்று.......

எழுதியவர் : பழனி ராஜன் (29-Nov-23, 4:52 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 91

மேலே