அனுபவத்தின் வார்த்தைகள்
வாசமுள்ள வரைக்கும் மலரானது மதிக்கப்படும்,
வாசமதும் போய்விட்டால் மலரானதும் மிதிக்கப்படும்,
இறைவன் தந்த வாழ்க்கையது இரவலர்களுக்கு புரியவில்லை,
இரந்துண்டு வாழ்வதிலே எள்ளளவும் மேன்மையில்லை,
அழகதும் உள்ளவரை ஆனந்தம் என்னும் பெரும் செருக்கு,
அழகிழக்கும் நாட்களிலே ஞானம் மெருகேறும் வாழ்வதற்கு,
அவசரத்தில் ஆடாதே; அழிவை தேடி நாடாதே,
அனுபவத்தின் வார்த்தைகள் இவை,
ஆராய்ந்து பார்த்து நீயும் எடுத்துக் கொள்.