மலர்தனுடன் மனதினையும் பறிக்கின்றாய் ஏனோ
மலரிதழ் மேல்துயிலும் வெண்பனிமுத் துக்கள்
புலர்ந்திடும் காலைக் கதிரில் மறைய
மலரிதழில் தேன்முத்து மின்னவந்து கொய்வாய்
மலரோடென் மென்மனதை யும்
------இன்னிசை வெண்பா
மலரிதழின் மேல்துயிலும் வெண்பனிமுத் துக்கள்
புலர்ந்திடும்மென் காலையினில் கதிர்தன்னில் மறைய
மலரிதழில் தேன்முத்து மின்னவந்து கொய்வாய்
மலர்தனுடன் மனதினையும் பறிக்கின்றாய் ஏனோ
------ கருவிளங்காய் காய் காய் மா கலிவிருத்தம்
மலரிதழின் மேல்துயிலும் வெண்பனிமுத் துக்களும்
புலர்ந்திடும்மெல் லியகாலைக் கதிர்தன்னில் மறைந்துவிட
மலரிதழில் சுவைநறுந்தேன் மினுங்கவந்து கொய்திடுவாய்
மலர்தனுடன் மனதையும் பறிப்பது ஏனோசொல்
---------தரவு கொச்சகக் கலிப்பா