அவள்

என்னைப் பார்த்தாள் புன்னகைத்தாள் பின்னே
வெட்கித்து தலை குனிந்து கால்விரலால்
மண்ணில் ஏதோ வரைந்தாள் என்னைப்பார்த்து
மெல்ல சிரித்தாள் அங்கிருந்து சென்றுவிட்டாள்
அவள் மண்ணில் வரைந்தது தான் என்ன
என்றறிய நான் சென்று பார்த்தேன்
அது கோலம் இதயத்தாமரை உன்னிதயத்தில்
இனிநான்தான் என்று கூறாமல் கூறிவிட்டாள் அவள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (3-Dec-23, 1:57 pm)
Tanglish : aval
பார்வை : 104

மேலே