உன் அன்பெனும் ஒற்றை வார்த்தையிலே எனை முழுவதும் இழந்தேன்

உன் அன்பெனும் ஒற்றை வார்த்தையிலே
எனை முழுவதும் இழந்தேன்

×××××××××××××××××××××××××××××××××

உன் அன்பெனும் ஒற்றை வார்த்தையிலே
உன்னிடம் என்னை இழந்தேன்

மணமேடை கண்டு என் நெஞ்சுக்குள்ளே
மனைவியாக குடி வந்தவளே உன்
அன்பால் குடி மறந்து
அறமுடன் ஓடி உழைத்து
உயர்ந்திட ஏணியாக இருந்தவளே

ஊதாரியாக திரிந்த என்னை
ஊக்கம் தந்து நல்மனிதனாக
உயர்த்தியதும் உன் அன்பே

முகவரியற்ற எனது வாழ்க்கையின்
முன்னுரையும் முடிவுவரையும் நீயே

தெருவில் நின்றேன் புறக்கணித்த சொந்தங்களினால்
திருவாரூர் தேர் ஆனேன் ஆதரவு
தந்த மனைவியின் அன்பினால்

இராண்டாம் தாயக அன்பால்
இருண்ட வாழ்வை ஒளி மயமாக்கினார்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (5-Dec-23, 9:49 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 134

மேலே