நெஞ்சையும் கொள்ளையடித்துச் சென்றாள்

மெல்லிய தென்றலில் மென்மலர்கள் புன்னகைக்க
தெள்ளிய நீரோடை தன்னில்மீன் கள்துள்ள
மல்லிகை யைப்பறிக்க வந்தவள் நெஞ்சையும்
கொள்ளை யடித்துச்சென் றாள்
---இன்னிசை வெண்பா

மெல்லிய தென்றலில் மென்மலர்கள் புன்னகைக்க
தெள்ளிய நீரோடை தன்னில்மீன் கள்துள்ள
மல்லிகை யைப்பறிக்க வந்தவளின் கண்ணழகில்
கொள்ளைகொ டுத்துவிட்டேன் பூநெஞ்சை மீட்பேனா

-----கூவிளம் விளம் காய் காய் கலிவிருத்தம்
ல் ள் ல் ள் இன எதுகை எனக் கொளினும் சிறப்பெனக் கொள்ளமுடியாது

எழுதியவர் : கவின் சாரலன் (6-Dec-23, 8:07 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 78

மேலே