காலினில்மென் மெட்டியொலி காதலியின் கைப்பிடித்தால்

சேலைகட்டும் பெண்ணுக்குத் தாலிகட்டி என்றுமிவள்
வேலியாய்நிற் பேனென்று வேள்வித்தீ முன்னுரைத்து
காலினில் மெட்டியொலி காதலி கைப்பிடித்தால்
ஆலினைப் போல்தழைக்கும் வாழ்வு

-----இன்னிசை வெண்பா

சேலைகட்டும் பெண்ணுக்குத் தாலிகட்டி என்றுமிவள்
வேலியாய்நிற் பேனென்று வேள்வித்தீ முன்னுரைத்து
காலினில்மென் மெட்டியொலி காதலியின் கைப்பிடித்தால்
ஆலினைப்போல் தழைத்திடுமே அன்பினிலே இவர்வாழ்வு

------கூவிளங்காய் காய் காய் காய் கலிவிருத்தம்
எதுகை மோனை எழிலுடன்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Dec-23, 9:21 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 39

மேலே