கவிஞனின் கனவோ காதல் நிலவோ

கவிஞன் கனவோ காதலில் நிலவோ
தவழும் தென்றல் தழுவும் மலரோ
பவழ இதழ்முத்து பரிசோ எனக்கு
அவிழும் குழலெழில் அந்தி தேவதையோ

கவிஞனின் கனவோ காதல் நிலவோ
தவழ்ந்திடும் தென்றல் தழுவும் மலரோ
பவழமும் முத்தும் பரிசோ எனக்கு
அவிழ்ந்திடும் கூந்தல் அந்தி எழிலே

----பலவாய்ப்பாட்டில் அமைந்த கவிதை
கருவிளம் மா மா மா எனும் ஒரே வாய்ப்பட்டு கலிவிருத்தமாக
எதுகை மோனை எழிலுடன்

கவிஞன் கனவோநீ காதல் நிலவோ
தவழ்ந்திடும் தென்றல் தழுவும் மலரோ
அவிழ்ந்திடும் கூந்தலெழில் அந்திப்பொன் வானே
பவழயிதழ் முத்தோ பரிசு
------இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (6-Dec-23, 5:13 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 96

மேலே