பெண்ணே உன்மேலெனது கண்

வெண்ணிலா பூப்பூக்கும் தண்பொழிலோ நீலவானம்
எண்ணிலா பூக்களாய் விண்மீன்கள் மின்னிடுதே
கண்ணில் இரண்டெழில் விண்மீன்வான் தந்ததோ
பெண்ணேஉன் மேலெனது கண்

----இன்னிசை வெண்பா
மூன்றாம் சீரில் மோனைக்கு மாற்றாக எதுகை அமைந்து ஓசையுடன்
நடக்கும் வெண்ணிலா வெண்பா

வெண்ணிலாதேன் பூப்பூக்கும் தண்பொழிலோ நீலவானம்
எண்ணிலாத பூக்களாக விண்மீன்கள் மின்னிடுதே
கண்ணிலிலில் இரண்டுமின்னும் விண்மீன்வான் தந்ததோ
பெண்ணெழில்உன் மேலெனது கண்என்மேல் உந்தன்கண்

----கூவிளங்காய் காய் காய் காய் கலிவிருத்தம்
மூன்றாம் சீரிலும் எதுகை பொலிந்து வர அமைந்தது

எழுதியவர் : கவின் சாரலன் (8-Dec-23, 9:53 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 104

மேலே