முத்திரைப் பொன்னென்பேன் மஞ்சள்பூ மேனியை

முத்தென் றிடுவேன்நான் மோகனப் புன்னகையை
சித்திர மென்பேன்நான் செவ்விதழ்த் தாமரையை
முத்திரைப் பொன்னென்பேன் மஞ்சள்பூ மேனியை
புத்தகம் போல்விரியும் காதல் விழிகளால்
பித்தனா னேன்எழுத் தில்
----- ஒரு விகற்ப பஃறொடை வெண்பா