மெல்லிய மாலையொன்றில் நீகண்ணால் சொன்னதோ

மல்லிகையைத் தொட்டுவந்த மென்தென்றல் தொட்டதென்னை
சில்லென்று வோர்கவிதை சொல்லாமல் வந்தது
மெல்லிய மாலையொன்றில் நீகண்ணால் சொன்னதோ
நில்காற்றே சொல்லிச்செல் நீ

-----இன்னிசை வெண்பா

மல்லிகையைத் தொட்டுவந்த மென்தென்றல் தொட்டதென்னை
சில்லென்று வோர்கவிதை சொல்லாமல் வந்ததுள்ளே
மெல்லியபொன் மாலையொன்றில் நீகண்ணால் சொல்லியதோ
நில்காற்றே சொல்லிச்செல் நீஎனக்கு பின்நகர்வாய்

------காய் காய் காய் காய் கலிவிருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Dec-23, 4:17 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 55

மேலே