நிலவில் நனைந்திடும் நீல மலர்கள்

நிலவில் நனைந்திடும் நீல மலர்கள்
புலவர் தமிழில் சிரிக்கும் நிலவு
நிலவில் தமிழில் நனைந்திடும் உன்னால்
மலர்ந்திடும் என்பூ மனது

-------இன்னிசை வெண்பா

நிலவில் நனையும் நீல மலர்கள்
புலவர் தமிழில் சிரிக்கும் நிலவு
நிலவில் தமிழில் நனையும் உன்னால்
மலரும் என்பூ நெஞ்சம் வாநீ

----புளிமா மா மா மா கலிவிருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Dec-23, 8:29 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 57

மேலே