தோளில்நீ சாய தொலைவில் நிலாக்காய

நாளின் கதிரொளி மெல்ல விடைபெற
தோளில்நீ சாய தொலைவில் நிலாக்காய
மாலைப் பொழுதும் மயங்க கருங்கூந்தல்
சோலை யினில்நான்சாய்ந் தேன்
------இன்னிசை வெண்பா
----------------------------------------------------------------------------------------------------------------------
நாளின் கதிரும் மெல்ல விடைபெறநீ
தோளில் சாய தொலைவில் நிலாக்காய
மாலைப் பொழுதும் மயங்க கருங்கூந்தல்
சோலை யினில்நான் சாய நீமகிழ்ந்தாய்
-----தேமா மா மா காய் கலிவிருத்தம்
ஒரே எதுகையின்றி வெண்பா போல் இருவிகற்பம் இதன் வேறுபாடு
ஒரே எதுகையில் வேறுபதிவில் முயலலாம்