மாலை விடைபெறுமுன் வா

நீலத் திரைகடல் முத்துக்கள் சிந்துதே
சேலைச் சிவப்பில் சிரிக்கும் அழகிலே
பாலைப் பொழிநிலா தீட்டிய ஓவியமே
சேலை விழியேந்த செந்தமிழ் பாட்டிசைக்க
மாலை விடைபெறுமுன் வா

-------ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (9-Dec-23, 5:34 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 62

மேலே