இராமனோ இராவணனோ -- நேரிசை ஆசிரியப்பா
இராமனோ இராவணனோ -- நேரிசை ஆசிரியப்பா
*********************
(எழுத்துத் தள தோழர் திரு பழனிராஜன் அவர்களது புனைவு
இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன என்ற
பதிவின் தாக்கமே இந்த பகுதி
பொழுதது விடிந்தும் குட்டித் தூக்கம்
போட்டிட விடியல் வந்திடக் கூடுமோ?
வருத்தமே அடையும் கண்கள் ; ஆமாம்!
ஆளுவோர் இராமனோ இராவணப் பதரோ,
புனிதனா மிருகமா எவரென
மதிக்கும் அதனின் பார்வை தப்புமே!
†************