தேச தாகம்

தேச தாகம்
××××××××××××××

வீரத் தியாகிகளின்
செங்குருதியில் கிடைத்த/
நல்லிரவு விடுதலையில்
கிடைக்கவில்லை விடியல்/

மக்களாட்சி முறையில்
தன்னாட்சி செய்கிறான் /
சனநாயகம் மறந்து
பணநாயகத்தில் தேரியவன்/

அந்நியரிடம் அடிமையானோம்
அறியாமை இன்மையால்/
அறிந்தே அடிமையாகிறோம்
வாக்கினருமை தெரியாமால் /

வடநாட்டு நாகரிகத்தால்
வாழ்வு முறையையும் /
நாகரிகப் பண்பாட்டயையும்
நாட்டின் வளத்தையும்/

சாதியால் ஒருமைப்பாட்டையும்
மதத்தால் வேறுபட்டும் /
இனத்தால் பிரிந்தும்
பணத்தால் மாறுபட்டும் /

நான்னெ அகந்தையால்
என்னெ சுயநலத்தால் /
நீரும் நெருப்புமாக
பிரிந்தே கிடைக்கிறோம் /

அறம்தனை வளர்த்து
அறிவால் உயர்ந்து/
அன்பால் இணைவோம்
அரணாக காப்போம் /

வேளாண்மை வளர்த்தே
வாளண்மை விலக்கி /
தேசத்தின் வளர்ச்சிக்கு
மூச்சையும் கொடுப்போம் /

சமத்துவப் புறா ஞான அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (13-Dec-23, 8:58 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 71

மேலே