இராவணன் ஆண்டாலென்ன

இராவணன் ஆண்டாலென்ன

ஆசிரியப்பா

கடுங்குளிர் மார்கழி வெளியில் காகமொன்று
கரைந்திட விடிந்ததோ வெனவே நானும்
கண்களை கசக்கியே எழுந்தேன் ஐயகோ
விடிய வில்லை இன்னமும் என்செய்ய
கருக்கலில் கடியாரம் பார்க்க ஐந்தே
காலே ஆகி யிருந்தது கால்தலை
முழுதும் மூடி போட்டேன் ராமன்
ஆண்டா லென்ன ராவணன் ஆண்டா
லென்ன போட்டேன் நானுமே
பொழுதது விடியக் குட்டித் தூக்கமே



...

எழுதியவர் : பழனி ராஜன் (13-Dec-23, 7:09 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 60

மேலே