வேண்டாம் கிறுக்கல்
மணக்கவிஞன் என்பார் எழுதிய வரிகள் கீழேத் தந்துள்ளேன்
அந்தரங்கம்
நெற்பயரிடம் அந்தரங்க கேள்வி கேட்டேன்
நீ எந்த வகையான அரிசி என்று
-மனக்கவிஞன்
இதை ஏன் இப்படிக் குறட்பாவில் எழுதக் கூடாது என்று மாற்றி அமைத்துளளேன்
ஒருவிகற்பக் குறள்வெண்பா
நெற்பயிரே எந்த ரகவரிசி நீபதிலோ
விற்குமங்கா டிப்போய் வினவு
நெ. நீ. மோனை
விற்கு. வினவு. மோனை
நெற். விற்கு. எதுகை
தமிழை வளர்கப் பாருங்கள்.. கிறுக்கிக் கிண்டல் செய்யாதீர்
....